சர்வதேச அவசர நிலை பிரகடனம்?

உலக சுகாதார அமைப்பினால் புதிய கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
சீனாவிலும் ஏனைய நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, இந்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதென, உலக சுகாதார அமைப்பின் பிரதானி டெட்ரோஸ் அத்னாமி கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
 இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments