பொங்கல் தினத்தில் சோகம் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்ரீதேவி ரயில் குருநாகல் நயிலிய ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கடவையினை கடக்க முற்பட்ட காரை மோதியதில் காரியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (15) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.
ரயில் குறித்த காரை மோதி சற்று தூரம் இழுத்து சென்றுள்ளதுடன் ரயில் நிலையத்திற்கு முன்பாக இருந்த பெயர்பலகையினையும் சேதப்படுத்தியுள்ளது.

No comments