ஷானி அபேசேகர விடயம்:அவசர விசாரணையாம்?பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்கிரமரத்னவுக்கு பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஷானி அபேசேகர தொலைபேசி உரையாடல் மூலம் இலங்கை பொலிஸ் சேவையை அபகீர்த்திக்கு உள்ளாக்கியமைத் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முன்னைய செய்தி:குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு இன்று (07) அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலில்  ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம், பொலிஸ் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments