ஒரே இனத்தின் கீழ் தமிழர்களுமாம்?


வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் அனைத்து தமிழ் அரச ஊழியர்களும் இம்முறையும் ஒரே இனத்தின் கீழ் ஒற்றுமையாக வாழ சத்தியம் செய்துள்ளனர்.

இன்று ஆரம்பமான புத்தாண்டில் ஒரே நாட்டில் , ஒரே கொடியில் , ஒரே இனத்தில் ஒற்றுமையாக வாழ்வோம் என உறுதியுரை ஏற்குமாறு அரச ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இச்சத்திய பிரமாணம் நடந்துள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி அனுப்பி வைத்துள்ள அறிவித்தலின் பிரகாரம்; ஆண்டின் முதல்நாள் உறுதியுரையிலேயே ஒரே இனத்தில் ஒற்றுமையாக வாழ சத்தியம் செய்துள்ளனர்.

இதன் பிரகாரம் 'ஒரே நாட்டில் , ஒரே கொடியில் , ஒரே இனத்தில் ஐக்கியமாக வாழ்வோம் ' என்னும் பதம் நீக்கப்பட்டு அதற்குப் பொருத்தமான வசனம் மாற்றப்படவேண்டுமென கோரப்பட்ட போதும் அது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

முன்னைய மைத்திரி ஆட்சி காலப்பகுதியிலிருந்து ஒரே இனத்தின் கீழ் ஒற்றுமையாக வாழ சத்தியம் செய்ய கோரப்பட்டமை தெரிந்ததே.

No comments