கடற்படை அதிகாரிகள் விடுதலை !


தமிழர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சந்தேக நபர்களான 13 கடற்படை அதிகாரிகள் இன்று (24) சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே குறித்த கடற்படை அதிகாரிகள் 13 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “தான் ஜனாதிபதியாக வந்த பின்னர் பொய்க் குற்றம்சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் அனைவரையும் விடுதலை செய்வேன்” என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments