இராணுவம் புலியானது எப்படி? - கோத்தாவை நோக்கி கேள்வி

இராணுவத்திடம் கையளித்த எமது பிள்ளைகளை புலிகள் பிடித்து சென்றதாக கூறுவது எப்படி சாத்தியமாகும் என்று வட, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இன்று (26) வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர். மேலும்,

போரின்போது இடம்பெற்ற விடயங்களை நாம் கோரவில்லை. போர் முடிவடைந்த பின்னர் ஓமந்தையிலும் வட்டுவாகலிலும் இராணுவத்திடமே எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். அத்துடன் வவுனியா, மன்னாரில் அரச கட்டுப்பாட்டு பகுதிகளிற்குள் எமது உறவுகள் காணாமல்போக செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை புலிகள் பிடித்துசென்றதாக கூறுகின்றமை எப்படி சாத்தியமாகும் - என்றனர்.

No comments