யாழில் பெற்றோல் ஊற்றி கடை எரிப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள கடை ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடையிலிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (12) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றதென சி.சி.ரி.வி. காணொளியை அடிப்படையாகக்கொண்டு பொலிஸார் குறிப்பிட்டனர்.
பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள ‘சஜித் பான்சி அன்ட் சூ மார்ட்’ என்ற கடைக்கே இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ளது.
கடையின் கதவை உடைத்து பெற்றோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. தீவைத்துவிட்டு ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து இரண்டு பெற்றோல் கலன்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments