பசுக்களை இறைச்சியாக்குபவர் சிக்கினார்

வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் புங்குடுதீவு ஜே/26  பிரிவு கிராமசேவகர் சிறீதரன் ஆகியோரின் முயற்சியால் நீண்டகாலமாக புங்குடுதீவிலுள்ள கால்நடை பசுக்களை இறைச்சிக்காக கடத்தும் மண்டைதீவினை சேர்ந்த தமிழ்மாறன் எனும் நபர் ஒருவர் நேற்று (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு முழு மாட்டின் இறைச்சியுடன் குறித்த நபர் கைய்யும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மடத்துவெளி - வல்லன் பகுதிகளுக்கிடைப்பட்ட பற்றைக்காட்டு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments