மருத்துவ பீட மாணவனை காணோம்?

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையகத்தை சேர்ந்த மருத்துவ பீட மாணவன் காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10 ஆம் திகதி இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல்போயுள்ள மருத்துவதுபீட மாணவன்,சின்னதம்பி மோகன்ராஜ் வயது 21 அக்கரபத்தனை ஹோல்புறுக் பகுதியை சேரந்தவர் என பொலிஸ் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ,
” கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு கடந்த வருடம் 2019.01.23 திகதியே குறித்த மாணவர் சென்றுள்ளார்.
இரண்டாம் வருடம் கல்வி பயின்றுக்கொண்டிருந்த அவர் கடந்த 10 திகதி கோயிலுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு விடுதியிலிருந்து வெளியேறியுள்ளார்.
அதனை தொடர்ந்து இரவு பத்து மணி வரை அவர் வராததன் காரணமாக அவருடைய நண்பர் ஒருவர் அம்மாணவனின் தாய்க்கு அழைப்பை ஏற்படுத்தி – மோகன்ராஜிக்கு வேறு தொலைபேசி இலக்கம் ஏதும் உள்ளதா என வினவியுள்ளார்.
அதனை தொடர்ந்து சந்தேகம் கொண்ட வீட்டார் குறித்த மாணவனின் தொலைபேசிக்கு பல தடைவைகள் அழைப்பு விடுத்த போதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து விட்டு உறவினருடன் குறித்த மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 திகதி காணாமல் போன மாணவனை தேடி சென்ற தாயார் தற்போது சுகயீகமுற்ற நிலையில் மட்டகளப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் தந்தை  தெரிவித்தார்.
இதே வேளை குறித்த மாணவன் தொடர்ந்து கோயிலுக்கு சென்று வருவதாகவும், மாணவனின் தொலைபேசியிலிருந்து இறுதியாக மன்னார் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அழைப்பு சென்றுள்ளதாகவும், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே மாணவனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இது குறித்த தகவல் தெரிவந்தவர்கள் குறித்த தொலைபேசிகளுக்கு அறிவிக்குமாறு அவரது தந்தை  கேட்டுக்கொண்டுள்ளார்.
தொலை பேசி இலக்கம் – 0515618983,-0775013587


No comments