உரிமையாளரைக் கொன்றது சேவல்

இந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி.

இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற கிராமத்தில்
இடம்பெற்இடம்பெற்றிருந்தது.

உயிரிழந்தவர் 53 வயதுடைய சரிபள்ளி வெங்கடேஸ்வர ராவ் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பிரகதவரம் கிராமத்தில் நடந்த ஒரு சேவல் சண்டைப் போட்டியில் வெங்கடேஸ்வர ராவ் சண்டைக்காக சண்டைக் களத்தில் சேவலைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்த போது சேவலும் சண்டைக்குத் தயாரானது.

கோழிச்சண்டைக்காக சேவலின் காலில் சிறு கூரிய கத்தி கட்டப்பட்டிருந்தது.

சண்டைக்காக தயாரான சேவல் உரிமையாளரின் தொடைப்பகுதியில் தாக்கிய போது, கத்தி தொடைப்பகுதியைக் கிழித்துள்ளது.

சம்பவத்தில் அவரது பிரதான தொடை நரம்பை கத்தி  வெட்டியது. இதனால் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.  வெங்கடேஸ்வர ராவை மருத்தவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார்.

வளர்த்த கோழி தன்னையே தாக்கிவிட்டது என்பதால் அதிர்ச்சிக்குள்ளாகி வெங்கடேஸ்வர ராவ் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இது ஒரு சோகமான சம்பவம், ஆனால் சேவல் அதன் எதிரியைக் கொன்று ஒரு பணப்பரிசை கொண்டுவருவதற்குப் பதிலாக அதன் உரிமையாளரைக் கொன்றது முரணாக அமைந்துள்ளது.

உரிமையாளரைத் தாக்கிய சேவல் தப்பிவிட்டது அதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லைஎன்று போலீஸ் அதிகாரி பி. ராஜேஷ் கூறினார்.

இந்தியாவின் உச்சநீதிமன்றம் சேவல் சண்டையை நாட்டின் 1960 ஆம் ஆண்டு விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் மீறலாக சட்டவிரோதமானது அறிவித்திருந்தது.

இது விலங்கு சண்டைகளை ஒழுங்கமைக்க அல்லது தூண்டுவதற்கு தடை விதிக்கிறது. 

ஆனால் ஜனவரி நடுப்பகுதியில் கொண்டாடப்படும் இந்து அறுவடை திருவிழாவான மகர சங்கராந்தியின் போது இந்தியாவின் பல தென் பிராந்தியங்களில் சேவல் சண்டைகள் தொடர்ந்ததால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் கைகளை பரிமாறிக்கொள்கின்றன. 

உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும், பெரும் தொகையும் பொலிஸ் மற்றும் சட்ட அமலாக்க முகவர் கையூட்டாகப் பெறுகின்றனர் என விலங்கு உரிமை ஆர்வலர்கள் புகார் அளிக்கின்றனர்.

No comments