வெள்ளைவானிலிருந்து தப்பியவரை தரக்கோருகின்றது கோத்தா அரசு?


'கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பெண் அதிகாரியை, இதுவரையில் எவரும் பார்த்தில்லை. அவர் தொடர்பான எந்தவொரு தகவல்களும் இல்லை. ஆகவே, இச்சம்பவம் தொடர்பிலான முறைப்பாடொன்றையும் வாக்குமூலம் ஒன்றையும் அவர் வழங்க வேண்டுமென, அரசாங்கம் பல தடவைகள் சுவிட்ஸர்லாந்து தூதரகத்திடம் கோரிக்கை விடுத்ததாக, அமைச்சரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரக்கத்தின் சர்ச்சைக்குரிய பெண் அதிகாரி, தனது கடத்தல் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை முன்வைக்கவும் முன்வர வேண்டுமென, அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு அவர் வந்து வாக்குமூலம் வழங்குவாராயின், அவரது பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்யுமென்றும், அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.

சுவிட்ஸர்லாந்து தூதுரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட விசாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த அதிகாரி, வெளிநாட்டுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா என்பதுத் தொடர்பில் தகவல் இல்லை என்றும் இந்த விடயத்தில், சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் மீது தேவையற்ற அழுத்தங்களை அரசாங்கம் பிரயோகிக்காதெனவும் தெரிவித்தார்.

குறித்த அதிகாரி, இதுவரையில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்யவில்லை என்றும் அவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டுமென்றும் பத்திரண கூறினார்.


No comments