படையினருக்கு பொதுமன்னிப்பு?


போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினருக்கு பொதுமன்னிப்பளிக்க மகிந்த முன்வந்துள்ளார்.கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பழிவங்கப்பட்ட இராணுவத்தினர்; மற்றும் பௌத்த தேரர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதுளை தியாதலாவ படை முகாமில் இன்று நடைபெற்ற படையினருக்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், கடந்த அரசாங்கம் இராணுவ சிப்பாய்களையும், பௌத்த பிக்குமார்களையும் பழிவாங்கியத்தை தவிர வேறொன்றையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

No comments