முறிந்து வீழ்ந்த மரம்! பாதிக்கப்பட்ட போக்குவரத்து

வவுனியா - மன்னார் பிரதான வீதியிலுள்ள வேப்பங்குளம் வீதியோரத்தில் இருந்த பெரும் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிப்படைந்திருந்தது.

இன்று (06) அதிகாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து 3 மணித்தியாலயமாக பாதிப்படைந்திருந்த நிலையில் பொலிஸார், பொதுமக்கள் மற்றும்  பயணிகளின் ஒத்துழைப்புடன் வீதியின் போக்குவரத்துக்கு இடையூறாகவிருந்த மரத்தினை வெட்டி, அவ்விடத்திலிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.

No comments