ஜமாலை வெட்டி கொன்ற ஐவருக்கு மரண தண்டனை

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஐெருக்கு மரண தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் இன்று (23) சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் துருக்கியில் வைத்து சவுதி தூதரகத்துக்குள் ஜமால் கஷோக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

உலக நாடுகளை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்த வழக்கிலேயே இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐவருக்கு மரண தண்டனையும் மூவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட சவுதி புலனாய்வுத் துறையின் முன்னாள் பிரதித் தலைவர் உட்பட மூவர் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments