உலகின் தலைசிறந்த மனிதராக தேர்வாகியுள்ள இளைய பெண்மணி!

2019 ஆண்டிற்க்கான தலைசிறந்த மனிதராக Time சஞ்சிகை பருவநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடும் கிரெட்டா தன்பர்க் (Greta Thunberg) அவர்களை தேர்வு செய்துள்ளது.

CNN தகவல்படி, சுவீடனைச் சேர்ந்த 16 வயது தன்பர்க், அந்த அங்கீகாரத்தைப் பெறும் மிக இளமையானவர் என்றும்,செப்டம்பர் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடு நிறுவனத்தின் வெப்பநிலை மாற்ற மாநாட்டில் உரையாற்றிய தன்பர்க் உலக கவனத்தை ஈர்த்தார் என்றும் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை மாற்றம் குறித்து உலகத் தலைவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று தன்பர்க் குற்றஞ்சாட்டிய காணொளி இணையத்தில் வெகுவாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

No comments