தென்னிலங்கை விசுவாசம்:தமிழர்களை வேட்டையாடும் காவல்துறை!


மறவன்புலோ காற்றாலை விவகாரம் தொடர்பில் முன்னணி மத செயற்பாட்டாளர் மறவன்புலோ சச்சிதானந்தம் மௌனம் காத்துவருவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.அவரது நெருங்கிய உறவுகளே காற்றாலைக்கான காணிகளை விற்பனை செய்தமை தொடர்பாக உள்ளுர் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றனர்.

இதனிடையே காற்றாலை மின் உற்பத்தியை நிறுத்தக்கோரி மறவன்புலவு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருந்த பிரதேச சபை உறுப்பினர் அ.நிமலரோகன் உட்பட 3 பெண்களையும் சாவகச்சேரி பொலீஸார் இன்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

மறவன்புலோ பகுதியில் காற்றாலையை நிறுத்தக் கோரி நடைபெற்ற ஆட்டத்தில் ஏற்பட்ட தடியடி வாள் வெட்டுத் தொடர்பாக விசாரணைக்கென அழைக்கப்பட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் 3 பெண்களே கைது செய்யப்படுள்ளனர்.

காற்றாலை நிறுவனத்தினர் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரே பிரச்சனைக்கும் சம்பவங்களுக்கு பொறுப்பாக இருந்தார் என்று கூறி பொலீஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்ததன் பேரில்  என்றும் விசாரணைக்கு என அழைத்து  சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ.நிமலரோகனையும் மூன்று பெண்களையும் சாவகச்சேரி பொலிசார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அபிவிருத்தி மக்கள் தெரிவிக்கையில் நிறுவனத்தினர் தான் வாளினால் பொது மகன் ஒருவரை வெட்டியதாகவும் காற்றாலை பிரச்சனை தொடர்பாக பொலீஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்தோம் ஆனால் பொலீஸார் அதற்கு  நடவடிக்கையும் எடுக்காது வாளால் வெட்டியவரைக் கைது செய்யாது கிராம மக்களில் மூன்று பெண்களையும் மக்கள் பிரதி நிதியான உறுப்பினரையும் கைது செய்துள்ளனர் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

No comments