இது பேரணி அல்ல போர் அணி!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது.

இன்றைய பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான திருமாவளவன், வைகோ, முத்தரசன், காதர் மொய்தீன், ராமகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ப.சிதம்பரம், வீரமணி, கனிமொழி, உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் தொடரும். சென்னையில் நடைபெற்றது 'பேரணி அல்ல: போர் அணி'. சென்னையில் நடந்த பேரணி தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தது. பேரணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விளம்பரம் செய்த அரசுக்கு நன்றி” என்று பேசினார்.

No comments