சிங்கபூருக்கும் தமிழருக்குமான தொடர்பு 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது!

'சோழமண்டலகரையில் இருந்து மலாக்கா நீரிணைக்கு- தமிழ் பண்பாடு ஒரு மீள் பார்வை'.என்ற பெயரில் சிங்கப்பூர் அரசு தமிழுக்கும்,சிங்கப்பூர் தமிழருக்கும் ஒரு விழா எடுக்கவிருக்கிறது.வருகிற நவம்பர் மாதம் 23ம் தேதி துவங்கி அடுத்த 2020ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிவரை அந்த விழா கொண்டாடப்பட்டு  வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறு, நாட்டின் வளர்ச்சியில் அவர்களது பங்கு என பல்வேறு துறைகள் சார்பாக,விழாக்கள்,புத்தக வெளியீடுகள்,கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ஆசிய நாகரீக அருங்காட்சியகம் ' From Sojourner's to Settlers - Tamils in South east Asia' என்று ஒரு நூலை வெளியிட்டு இருக்கிறது.அந்த நூலில் உலகெங்கும் இருந்து பல எழுத்தாளர்கள், ஆய்வறிஞர்கள் பல் வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள்.


அதில் லேய்ன் சின்க்ளேர் ( main Sinclair ) ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரையை பதிவு செய்திருக்கிறார்.அந்தக் கட்டுரையின் படி ,1843-ல் சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அங்கிருந்த சிங்கபுர ஆறு கடலில் கடக்கும் இடம் குறுகலாக இருந்ததால் அதை அகலப் படுத்த ஆற்றின் இரு கரையிலும் வெடிவைத்து கரையைத் தகர்த்தனர். அப்போது வெளிப்பட்ட  சில பாறைக் கற்கள் ஒரு கட்டிடத்தின் பகுதி போல தெரிந்ததால் அவற்றை பத்திரப்படுத்தி சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் வைத்தனர்.

தொடர்ந்து அவற்றை ஆய்வு செய்த சின்க்ளேர் அதில் ஒரு கருங்கற் பாளத்தில் 'கேசரிவ' என்கிற சில எழுத்துகளை பார்த்திருக்கிறார். இதுவரை அந்த கருங்கல துண்டை பல தொல்பொருள் அறிஞர்கள் ஆய்வு செய்து இருந்த நிலையில் இந்த ' கேசரிவ' என்பது சோழர்களின் பட்டமான ' பரகேசரிவர்மன்' என்பதன் சிதைவு என்று உறுதி செய்தசெய்தார்.அதைத் தொடர்ந்து வியாபார நிமித்தமாகவும்,போர் நிமித்தமாகவும் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இந்த மலாக்கா நீரிணையின் கரைகளில் குடியேறி.விட்டனர். அவர்கள் வழிபடக் கட்டிய ஒரு கோவிலின் இந்த இடிபாட்டில் கிடைத்த கற்கள் என்று உறுதி செய்திருக்கிறார்.

No comments