சுதந்திர கட்சியின் அமைப்பாளர் உமா சஜித்துக்கு ஆதரவு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு கொழும்பு கிழக்கு மற்றும் மேற்கு தேர்தல் தொகுதி சார்பாக ஆதரவு வழங்கும் கூட்டம் ஒன்று, அன்மையில் கொழும்பு மாநகர சபை முதல்வர் ரோசி சேனநாயக்கா தலைமையில், கிருலப்பனை பொதுச் சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான உமாச்சந்திர பிரகாஷ், பொது வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

கொழும்பு மாவட்டத்தில் தமிழர்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்குள்ளவராக இருந்தாலம் இவரத கட்சித் தாவல் பல மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments