வடகிழக்கு இணையாது விட்டால் இதுதான் நடக்கும்; சிவாஜி

வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் நாடு துண்டாடப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கல்முனையில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற வைத்த தமிழ் பேசும் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் மக்கள் தலைமைகள் எம்மை ஏமாற்றி விட்டனர்.
இது தவிர கிழக்கு மாகாணத்தை பிரிப்பதில் தமிழர் சார்பான வழக்காடிய மதியாபரணம் சுமந்திரன் என்பவர் அதை தள்ளுபடி செய்ய முயற்சித்த நிலையில், தற்போது வடக்கு கிழக்கு இணைய வேண்டும் என கூறி வருகின்மை வேதனை தருகிறது.
கூட்டமைப்பு என கூறுபவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத்துக்கு கீழே வேலை செய்கின்றனர். வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றால் நாடு துண்டாடப்படும் என்பதை பகிரங்கமாக கூற விரும்புகின்றேன்” என மேலும் தெரிவித்தார்.

No comments