சஜித் மனைவியும் களத்தில்!


சஜித் பிறேமதாசாவிற்கு ஆதரவாக அவரது மனைவியும் முழுவீச்சில் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

இன்றையதினம் மக்கள் முன்னேற்றக் கூட்டணயின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்ணனி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கான பிரசார கூட்டங்கள் வன்னியில் பரவலாக நடைபெற்றுவருகின்றது. இக்கூட்டங்களில் சஜித் பிரேமதாசவின்; துணைவியாரும், கொழும்பு மாநகர முதல்வர் றோசி சேனநாயக்காவும்; கலந்து கொண்டுள்ளர்.

காலை 10.00 மணி - ஆனந்தி ஹோட்டல், வவுனியாவிலும், மதியம் 12.00 மணி - கோவில்குடியிருப்பு ,முல்லைத்தீவு பகுதியிலும் மாலை 2.00 மணிக்கு - நேசன் குடியிருப்பு பொதுநோக்கு மண்டபம் , புதுக்குடியிருப்பு இனிலும் மாலை 4.00 மணிக்கு கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்திலும் பிரச்சார கூட்டங்களிற்கு ஏற்பாடாகியுள்ளது.

இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஏழு பேர் போலியானவர்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்கள் பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

குறிப்பாக கோத்தபாயவிற்காக மட்டும் நால்வர் அவ்வாறு களமிறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

No comments