கணவனை கொன்ற மனைவி

மனைவி தாக்கியதில் முன்னாள் போராளியான கணவன் பரிதாபமாக பலியான சம்பவம் ஒன்று மட்டக்களப்பு - கிராண் கோறளை மடு முருகன் கோவில் வீதிப் பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற தகராறையடுத்து மனைவி கணவனைத் தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு இறந்த நபர் கூலித்தொழிலாளியான  49 வயதுடைய நபர் என தெரிவிக்கும் பொலிஸார் இவர் முன்னாள் போராளியென்பதுடன் இரு பிள்ளைகளின் தந்தையெனவும் தெரிவித்தனர்.

No comments