சித்திரவதைக்குள்ளாகும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களுக்காக களமிறங்கும் மலாக்கா எம்பி;

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்தரவதை செய்யப்பட்டதாகவும் வலுக்கட்டாயமாக அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கூறப்படுவது குறித்து மலாக்கா எம்பி கூ போய் தியோங் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


தடுப்புக் கைதிகள் சித்தரவை செய்யப்பட்டது உண்மையா என்பதைக் கண்டறிய உடனடியாக விசாரணைகளைத் தொடக்குமாறு இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் மடோரையும் உள்துறை அமைச்சர் முகைதின் யாசினையும் அவர் கேட்டுக்கொண்டார்.
நேற்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்துக்குக்  கொண்டுவரப்பட்ட விடுதலைப்புலிகள் ஆதரவு  தொடர்பு கைதிகள் அந்நாட்டு காவல்துறையின் காவலில் இருந்த காலத்தில் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் மிரட்டல்களுக்கு ஆளானதாகவும் கூறியதாக போய் தியோங் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

No comments