காசு மேலே காசு பார்க்கும் மக்கள் பிரதிநிதிகள்!


யாழ்.மாநகர சபையில் வௌ;வேறு வேலைத்திட்டங்களிற்கென ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளமை வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.ஆனாலும் தமக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள பின்னிற்காத மக்கள் பிரதிநிதிகள் இன்னொருபுறம் ஒதுக்கப்பட்ட நிதி திரும்புவது பற்றி வாயே திறக்காது இருந்துவருகின்றனர்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு தொலைபேசி படி வழங்க வேண்டும் என சபை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 16 மாதங்களுக்கு பின்னர் தர்மானம் ஒன்று முன் மொழியப்பட்டு, சபையில் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் படியில் 6000 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. (உறுப்பினரின் சம்பளம் 20, 000 ரூபாய் அத்துடன் தொலைபேசி படி 6,000 ரூபாய்  என 26,000 தற்போது வழங்கப்படுகின்றது)

அந்த நிலையில் சுற்று நிரூபம் பிரகாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்திற்கு முன்னரான சுமார் 16 மாதங்கள் வரை வழங்கப்படாத தொலைபேசி படி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கடந்த 8 மாதமளவில் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் நிலுவை காசு என 96 ஆயிரம் ரூபாய் ஒரே தடவையில் வழங்கியுள்ளார்கள்.

அவ்வாறாக சபையில் உள்ள 44 உறுப்பினர்களுக்கும் 42 இலட்சத்து 24ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்கள்.

பொதுவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் , அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கால பகுதியில் இருந்தே நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் சுற்று நிரூபம் கூறியதாக அதற்கு முன்னரான கால பகுதிக்கான படியை நிலுவையுடன் பொக்கற்றினுள் போட்டுள்ளனர்.

மாநகர சபையால் எதிர்பார்க்கப்பட்ட வாடகை வருமானம் 217 மில்லியனாக இருக்கும் போது , 09 மாதம் வரையில் கிடைத்த வருமானம் 59 மில்லியன் ரூபாய் மட்டுமே கிட்டியுள்ளது.

அதேபோல 2018ஆம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வேலை கால தாமதம் உள்ளிட்ட சில காரணங்களால் 12 மில்லியன் ரூபாய் திறை சேரிக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments