டக்ளஸிற்கு கதிரை சந்தேகம்?

கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய இடைக்கால அரசின் அமைச்சரவை குழு பெயரிடுவதில் அவர்கள் பல உள் முரண்பாடுகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக டக்ளஸிற்கு அமைச்சு பதவி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
15பேர் அடங்கிய இந்த அமைச்சரவை குழுவில் 7 அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலும், 5 அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியில் இணைந்த சிறு கட்சியிலும், அமைச்சர்கள் மூவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதில் சிறு கட்சிகளுக்கான அமைச்சர்கள் ஐவரில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன,வாசுதேவ நாணயக்கார மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியவர்களுக்கிடையில் பகிர்ர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் தமிழ் பிரதிநிதித்துவம் பெற ஆறுமுகம் தொண்டாமானுக்கு பதவி வழங்கப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு மூன்று அமைச்சு பதவி கிடைப்பதுடன், 2018 ல் ஸ்ரீ.ல.சு.க.வை விட்டு வெளியேறிய 15 உறுப்பினர்களும் வலையில் சிக்காததால், அவர்களில் எவருக்கும் அமைச்சு பதவி கிடைக்காத தன்மை காணப்படுகிறது. அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவசியம். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில்  முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாததால், ஸ்ரீலசுகவின் பைசர் முஸ்தபா போன்ற ஒருவருக்கு வழங்கப்படும் நிலைமை உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் மொட்டில் மீதமாகும் அமைச்சு பதவியில் 7இல் ஒன்றை பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதால் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஒதுக்கவேண்டிவரும். மீதமுள்ள 6 அமைச்சு பதவிகளைப் பகிர்ந்து கொள்ள கிட்டத்தட்ட 50 மொட்டு  எம்.பி.க்களுக்கு இடையில் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் எம்.பி.க்களுக்கு பதவிகள் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் மகிந்தானந்த, ஜோன்ஸ்டன் மற்றும் ரோஹித ஆகியோருக்கு  அமைச்சரவை பதவி வழங்கப்படாது என்றால்  பல வழக்குகள் இருக்கும்  விமல் வீரவன்ச எவ்வாறு நியமிக்கப்படுவார் என்ற தீவிர கேள்வி உள்ளது என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments