மார்ச்சா ? மேயிலா? தேர்தல் பரபரப்பு!


பாராளு­மன்றத் தேர்தல் பெரும்­பாலும் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடத்­தப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
விரைவில் பாரா­ளு­மன்றத் தேர்­தல் நடத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூறி­யி­ருந்­தாலும், பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்­கான அதி­காரம் மார்ச் முதலாம் திக­திக்குப் பின்­னரே அவ­ருக்கு கிடைக்கும்.
இந்த நிலையில், ஜனா­தி­பதி பாரா­ளு­மன்றத் தேர்தல் அறி­விப்பை வெளி­யிட்ட பின்னர், தேர்­தலை நடத்­து­வ­தற்கு, தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு குறைந்­தது இரண்டு மாதங்கள் தேவைப்­படும் என்று ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.
எனவே மார்ச் 2 ஆம் திகதி பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான அறி­விப்பை ஜனா­தி­பதி வெளி­யிட்­டாலும், மே மாதம் முதல் வாரத்­தி­லேயே தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments