அமெரிக்க அரசியல் பிரிவு அதிகாரியை சந்தித்தார் கலா

அமெரிக்காவின் அரசியல் பிரிவு அதிகாரிக்கும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த  சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் இன்று (16) காலை இடம்பெற்றது.
அமெரிக்க நாட்டின் அரசியல் பிரிவு அதிகாரி அடம்ஸ் சுமித்திற்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
குறிப்பாக தற்போது வடக்கு மாகாணத்தில் உள்ள நிலைமைகள் தொடர்பாக அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி கேட்டறிந்துகொண்டதாக அமைச்சர் விஜயகலா தெரிவித்தார்.

No comments