11 கோரிக்கைகளுடன் களமிறங்கியது உதயசூரியன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 11 கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளதுடன், கோரிக்கையை ஏற்பவர்களுக்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் வவுனியாவில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார பரவலாக்கல் முறையிலான அதிகார பரவலாக்கல் வழங்கப்படவேண்டும். அத்துடன் தென்னாபிரிக்காவில் உள்ள அடிப்படை உரிமைச்சட்டத்தினையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதனை முதன்மை கோரிக்கைகளாக கொண்டே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் எடுத்துச்சென்று கலந்துரையாடுவதற்காக செயற்குழு உறுப்பினர் அரவிந்தன் தலைமையிலான நால்வர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவினை கட்சிக்கு அறிவித்த பின்னர் தீர்மானம் மேற்கொண்டு எந்த வேட்பாளருக்கு ஆதரிப்பது என மக்களுக்கு அறிவிக்கும் எனவும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments