டெலோவிலிருந்து வெளியேறுகிறார் சிவாஜி?


டெலோ கட்சியின் உள்ளக முரண்பாடுகளையடுத்து அக்கட்சியிலிருந்து கே.சிவாஜிலிங்கம் வெளியேறவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டிய சிவாஜிலிங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக நேற்றைய வவுனியா கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக யாழ்ப்பாணத்தில் கட்சியின் தலைவர் சிறீகாந்தாவை இன்று மாலை சந்திக்கும் சிவாஜிலிங்கம் நாளை தனது டெலோவிலிருந்தான விலகல் பற்றி அறிவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் எடுக்காத நிலையில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ அமைப்பின் தவிசாளர் சிவாஜிலிங்கம், சுயேட்சையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருந்தார்.
இதற்கு கட்சியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அவருக்கு எதிராக கட்சி நிச்சயம் நடவடிக்கை எடுக்குமென்றும் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துமிருந்தார்.

இந்நிலையிலேயே, சிவாஜிலிங்கம் தேர்தலில் களமிறங்கியிருப்பது தொடர்பில் கட்சியில் அவசர கூட்டங்கள் நடத்தப்பட்டு அவருக்கெதிரான நடவடிக்கைகளிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே தனது கட்சியிலிருந்து வெளியேற்ற முடிவு தொடர்பில் நாளை சிவாஜி அறிவிக்கவுள்ளார். 

No comments