சிவாஜிக்கு வெள்ளை நாய்பிரிவு பாதுகாப்பு?


கோத்தாவிடம் கோடி கோடியாக வாங்கிவிட்டதாக தமிழரசுக்கட்சியும் ஏனைய தரப்புக்களும் குற்றஞ்சாட்டிவரும் சிவாஜிலிங்கம் தற்போதும் எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதமும் அற்றவராகவே வல்வெட்டித்துறையில் நடமாடிவருவதாக ஊடகவியலாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தங்களிற்கு வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பு எங்கேயென கேள்வி எழுப்பிய போது தன்னுடன் கூடவே திரிகின்ற இரு வெள்ளை நாய்களே தனது பாதுகாப்பு என்றிருக்கிறார் சிவாஜிலிங்கம்.

நாடாளுமன்ற உறுப்பினராக, பின்னராக வடமாகாணசபை உறுப்பினராக இருந்திருந்த எனக்கு இப்போதும் சொந்த வீடில்லையென தெரிவித்துள்ள அவர் தனது அலுவலகத்தை வாடகை வீட்டிலேயே நடத்திவருகின்றார்.

தன்னை சந்திக்கவரும் ஊடகவியலாளர்களை கூட தனது ஓட்டை அலுவலகத்தை விட கடற்கரையில் சந்திப்பதையே அவர் வழக்கமாக கொண்டிருக்கின்றார்.

அத்தகைய கடற்கரை பேட்டிக்கு அவருக்கு துணையாக அவரது வெள்ளை நாய்களே வந்துள்ளன.

No comments