13 அம்சக் கோரிக்கையை சஜித் ஏற்க மாட்டார்

ஐந்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக, பேச்சு நடத்துவதற்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தயாராக இல்லை என அவரது பரப்புரைக் குழுவைச் சேர்ந்த ஷிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

5 தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 13அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாதென ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாதென சஜித் பிரேமதாச சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள ஷிரால் லக்திலக, “ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக, சஜித் பிரேமதாச தெளிவான கொள்கையை முன்வைத்துள்ளார். அதற்கு அப்பால் பேச்சுக்களை நடத்துவதற்கு எதுவும் இல்லை.

தமிழ்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

தமிழ் மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதாக நாங்கள் உணருகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments