சஜித்தின் உயிரை பறிக்கும் முயற்சியா? மின் தடையால் நேரவிருந்த விபரீதம்

குருநாகல் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளச் சென்ற சஜித் பிரேமதாசவின் ஹெலிகொப்டர் தரையிறங்க முற்பட்ட போது விளக்குகள் அணைக்கப்பட்டு மின் தடை ஏற்படுத்தப்பட்டதால் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற சம்பவம் இன்று (30) இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தின் காணரமாக குறித்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமலேயே சஜித் பிரேமதாச திரும்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அஜித் பி பிரேரா,

ஹெலிகொப்டர் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சஜித்தின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் மாநகர சபையால் ஹெலிகொப்டர் இறங்க வேண்டிய இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது - என்றார்.

சஜித் கலந்து கொள்ள முடியாமல் போன நிகழ்வில் பேசிய இராஜாங்க அமைச்சர் அசோக அபேயசிங்க,

திடீரென மின் தடை ஏற்படுத்தப்பட்டதால் ஹெலிகொப்டர் இறங்குவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் சஜித்தை திருப்பி அனுப்பிவிட்டோம். கட்டுநாயக்க சென்று பிரச்சாரத்துக்கு வருகிறேன் காத்திருக்க முடியுமா? என்று அவர் கேட்டார். மக்களை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைக்க முடியாது என்பதால் சாத்தியமில்லை என்று தெரிவித்தேன் - என்றார்.

No comments