கோத்தாவின் பலியாடாகிய யாழ்.காவல்துறை!


தனது யாழ்.விஜயத்தின் போது பாதுகாப்பு வழங்க வந்திருந்த காவல்துறையினரை தனது தேர்தல் விளம்பரத்திற்கு கோத்தபாய பயன்படுத்தியுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

கொழும்பிலிருந்து உலங்குவானூர்தி மூலம் யாழ்.கோட்டை வந்திருந்த கோத்தபாயவை  யாழ்ப்பாணத்தின் உதவி காவல்துறை அத்தியட்சகர்,மற்றும் தலைமையக காவல்துறை அதிகாhழ ஆகியோர் மரியாதை நிமித்தம் சந்திருந்தனர். இந்நிலையில் அவருடனான சந்திப்பினை தங்கள் பிரச்சாரத்திற்கு கோத்தா தரப்பு சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப்புகைப்படத்தை கோட்டபயாவே வெளியிட்டார்.இதுதான் உண்மையான கோத்தபாயவின் சுபாவமென எதிர் தரப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

No comments