புலம்பெயர் தமிழர் மனதை மாற்றி ஐநா செல்வதை தடுப்பேன்

புலம்பெயர் தமிழர்களின் மனங்களை தான்னால் மாற்ற முடியும் என ஜனாதிபதி வேட்பாளர் ரொஹான் பல்லேவத்த தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் மனங்களை மாற்றி ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை அகற்றிக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அண்மையில் பிரித்தானியாவுக்கு சென்றிருந்த தான் புலம்பெயர் தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஈழக்கொடி ஏற்றப்பட்டுள்ள குறித்த நிகழ்வில் தம்மால் உரையாற்ற முடியாது என தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக ஏற்பாட்டாளர்கள் தான் உரையாற்றும்போது அந்தக்கொடியை அகற்றியதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ரொஹான் பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

No comments