குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் மன்னாரில் வழிபாடு

தற்கொலை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கொச்சிக்கடை, கட்டுவாபிட்டிய ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மன்னார் வேதசாட்சிகளின் திருத்தலத்திற்கு சென்றுள்ளனர்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (12) காலை மன்னாருக்கு வருகை தந்துள்ளனர்.

மன்னாருக்கு வருகை தந்த குறித்த மக்கள் தோட்டவெளி வேதசாட்சிகளின் திருத்தலத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு விசேட ஆராதணைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

No comments