சட்டவிரோத வலைகளுடன் ஐவர் கைது


வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இன்று காலை 7 மணியளவில்  நடத்திய திடீர் சுற்றிவளைப்பு ஒன்றில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூடுவந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளில் நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்னீர் மீன்பிடித்தலில் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை உபயோகித்து மீன்பிடித்தலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் நோக்கில் இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பில் சூடுவந்தபுலவை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரூபா 150,0000 பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் , அதற்குப் பயன்படுத்தப்பட்ட தோணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments