ஐநாவை மதிக்காத அவுஸ்ரேலிய; நாடுகடத்தும் நிலையில் தமிழர்கள்!

ஈழத்தில் இருந்து அகதித் தஞ்சம் கோரி படகுமூலம் ஆஸ்ரேலியாவுக்கு செல்பவர்களை அந்நாட்டு அரசு சட்டவிரோதமாக கருதி  கைதிகள் போல் நடத்தி மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்துவது வழமையாகிவிட்டது.

இந்நிலையில், நடேசலிங்கம், கோகிலபத்மபிரியா ஆகிய தம்பதிகள் கடந்த 2012, 2013ம் ஆண்டுகளில் தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வந்து சேர்ந்தனர். அங்கு தங்கள் உறவினர்கள் வசிக்கும் குயின்ஸ்லேண்ட் பகுதியில், குடியேறினர்.
இந்த தம்பதிக்கு தற்போது கோபிகா, தருணிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர்கள் சட்டவிரோதமாக குடியேறியதை கடந்த 2017ல் கண்டுபிடித்த குடிபெயர்வு அதிகாரிகள் இவர்களை சிறைபிடித்தனர். இதையடுத்து, கடந்த 19 மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். தங்களை அகதிகளாக அங்கீகரிக்கவும், குழந்தைகளுக்கு குடியுரிமை கேட்டும் இவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவர்களின் வழக்கறிஞர் கரீனா போர்டு, இவர்களை அகதிகளாக அங்கீகரித்து சமூகத்தில் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் அல்லது கைதி வாழ்க்கைக்கு ஏதோ ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு மனு அனுப்பினார். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலும், இவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அகதிகள் அந்தஸ்து அளித்து குடியேற அனுமதிக்குமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அரசு அதை நிராகரித்து விட்டது.
தற்போது இவர்களுக்காக ஆஸ்திரேலியத் தமிழர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு போராடி வருகின்றனர். அவர்களுக்கு உள்ளூரைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments