விசாணைக்கு காலம் நீடிப்பு?


அரச திணைக்களங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. இந்நிலையிலேயே, இதன் கால எல்லை, ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2015/01/15 தொடக்கம் 2018/12/31 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, 2019/01/14 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், குறித்த ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

No comments