தியாக தீபம் திலீபன் நினைவாக யேர்மனி பேர்லின் நகரில் 9 ஆவது உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2019

தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக 9 ஆவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது .

தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது .
இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மேற்பிரிவுக்கான பகுதியில் 7 கழகங்கள் பங்குபற்றினர்.
சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல இளம் விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்களாக காணப்பட்டார்கள் .
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டு சிறந்த விளையாட்டு வீரர்களும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான மதிப்பளித்தலும் சிறப்பாக நிறைவு பெற்றது . இவ் நிகழ்வில் கிடைக்கப்பெற்ற நிதி தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற கழகங்கள் :
1. Maths Master
2. Royal SüdX II
3. VENNILA SC

Bester Spieler
Mathan

Bester Torwart
Sanjith Suthakar

Bester Torschütze
Thanusan Kulasingam

Wir bedanken uns bei allen Helfern und Spielern für die Teilnahme am 9. Hallenfußballturnier als Andenken an Lt. Colonel Thileepan Cup 2019
Platzierung
1. Maths Master
2. Royal SüdX II
3. VENNILA SC

Bester Spieler
Mathan

Bester Torwart
Sanjith Suthakar

Bester Torschütze
Thanusan Kulasingam

Die Anmeldegebühren wird wie immer an Studenten in der Heimat für Studienkosten verwendet. Abgesehen von gewinnen und verlieren geht es um den Spaß an Turnieren teilzunehmen und dabei die Studenten in der Heimat zuunterstützen bzw. ihr Leben aufzubauen.
WIR BEDANKEN UNS IM NAMEN ALLER STUDENTEN BEI JEDEM SPIELER UND HELFER.

Tamilische Sportbund DE

No comments