கோத்தாபய வென்றால் நன்மையே - விக்கியர்

சஜித்துக்கு தமிழர்கள் வாக்களிக்காது விட்டால் கட்டாயம் கோத்தாபய வெல்வார். கோத்தாபய வென்றால் சர்வதேச ரீதியில் எமக்கு நன்மையே, தீமையில்லை என்று முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்,

கோத்தாபய வெற்றி பெற்றால் எமக்கே நன்மை. அமெரிக்காவுடன் அவருக்கு கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தாலும் அமெரிக்கா அவரை வழிநடத்தும். அது தமிழர்களுக்கு சார்பாக இருக்கும். ஏனென்றால் புலம்பெயர் தமிழரின் செல்வாக்கு அமெரிக்காவில் இருக்கின்றது - என்றார்.

No comments