நிறைவேற்று அதிகாரத்தை குறுக்கு வழியில் நீக்க இடமளியோம்- வேலு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு, குறுக்கு வழி அரசியல் முன்னெடுக்கப்படால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் இன்று (01) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இன்னும் உரிய வகையில் அதிகாரங்கள் பகிரப்படவில்லை. கடந்த காலங்களில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. நல்லாட்சியின் கீழ் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்தாலும், உரிமைகளை முழுமையாக அனுபவிக்ககூடிய சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை.

இந்நிலையில் ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்பது போல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையானது ஏதேனுமொரு வழியில் பாதுகாப்பு கவசமாக இருந்து வருகிறது. எனவே, அந்த முறைமையை நாம் பாதுகாக்க வேண்டும். என்றார்.

No comments