துணைவேந்தர் பதவி புலனாய்வு அறிக்கை பிரகாரமே


அண்மையில் யாழ் பல்கலை கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் விக்கினேஸ்வரன் எந்த காரணமும் சொல்லப்டாமல் பதவியில் இருந்து நீக்க பட்டு இருந்தார். இது தொடரபாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் கைக்கீம் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் மோகன் டி சில்வா ஆகியோர் இலங்கை ராணுவம் , அதன் புலனாய்வு துறை அளித்த அறிக்கைகளின் படி அவர் பதவி நீக்கப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள் .

இலங்கை உயர் கல்வி நிறுவனங்களில் தலைமை அதிகாரியை யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு பின்னரும் ராணுவம் தீர்மானிக்கிறது. எந்தவொரு விளக்கமும் இல்லாமல் துணைவேந்தரை அகற்றுவதில் பல்கலைக்கழக மானிய ஆணையம், உயர்கல்வி அமைச்சகம் மற்றும் இராணுவம் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த வகையான தொடர்பு மிகவும் ஆபத்தானது..வடக்கு கிழக்கு சிவில் நிருவாகத்தில் குறிப்பாக கல்வி நிறுவனங்களில் ராணுவத்தின் தலையீடு மிக கோரமானது. நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் தெரிவு செய்த தமிழரசு பாராளமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் UNP அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது மிக துயரமனானது

மறுபுறம் யாழ் பல்கலை கழகத்தை பொறுத்தவரை கல்வி சாரதா (Non Academic staff) ஊழியர்களை மஹிந்த ராஜபக்சே காலத்தில் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்தார் . டக்ளஸ் என்கிற ஆயுததாரியின் அடியாளாக இருப்பது மட்டுமே தகுதி என்கிற ரீதியில் பலர நியமிக்கப்பட்டார்கள் . வாகனம் ஓடத்தெரியாதவர்கள் சாரதிகளாக நியமிக்கப்பட்டனர் . கணனி பற்றி அடிப்படை தகுதி இல்லாதவர்கள் CAA ஆக நியமிக்கப்பட்டனர் .

இப்போது நல்லாட்சியில் சித்தார்த்தன் , சுமந்திரன் , சிறிதரன் , மாவை சேனாதிராஜா , சரவணபவன் என தமிழரசு கட்சி பாராளமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்கள் , உறவினர்கள் சிபாரிசு செய்யப்படுகின்றனர் . டக்ளஸ் தேவானந்தா தனது சிபாரிசுகளை இப்போது சித்தார்த்தன் ஊடக செய்கிறார்..பாராளமன்ற உறுப்பினர்களுக்கு அடியாளாக இருப்பது பலகலை உட்பட அரச நிறுவனங்களில் வேலை பெறுவதற்கு தேவையான ஒரு தகுதியாக சொல்லபடுகிறது .இதை பயன்படுத்தி சிங்கள அமைச்சர்கள் , முஸ்லீம் அமைச்சர்கள் தங்கள் உதவியாளர்களையம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்
பல்கலையில் மட்டுமல்ல யாழ்ப்பாண வைத்தியசாலை , மின்சார சபை , மாவட்ட செயலகம் என எல்லா நிறுவனங்களிலும் இந்த அவலம் தொடருகிறது

எந்தவொரு பொறிமுறையும் இன்றி அரச நியமங்கள் பின்பற்றப்படமால் தங்கள் உதவியாளர்களையும் எடுபிடிகளையும் நியமிப்பது என்றால் அப்பாவிகளின் நிலை என்ன ? என கேள்வி எழுப்பபட்டுள்ளது.

No comments