உயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;

தமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்று இணையக் கல்விக் கழகத்தைத் திரு. ஓங் சுற்றிப் பார்த்து அங்கு கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளார். 

தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தில் சேரும் மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தின் ஓர் அங்கமாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வளங்களைப் பயன்படுத்துவதால் , தமிழ் இலக்கியம் சார்ந்த அம்சங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அதன் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்வர்,
தொடக்கக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டம் அடுத்த ஆண்டுமுதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் ஓங் தெரிவித்துள்ளார்.No comments