தமிழர்கள் கடத்தப்பட்ட உண்மைகள் மறைப்பு; சவேந்ரவிடம் 5 மணி நேர விசாரணை

ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ குற்றப் புலனயவுப் பிரிவினர் ஐந்து மணிநேர விசாரணையொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த உண்மை நிலைமைகள் மறைக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ உள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயம் தொடர்பில் இன்று அவரிடம் விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டன. 

குற்றப் புலனயவுப் பிரிவின் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறைக்கு இன்று அழைக்கப்ப்ட்ட சவேந்ர பெர்ணான்டோவிடன் அங்கு சுமார் 5 மணி நேரம்  விஷேட விசாரணைகள் நடாத்தப்பட்டு சிறப்பு வககு மூலம் பதிவு செய்யப்பட்டதாக  பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்னாகொட, சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்திய தகவல்களை மையபப்டுத்தி, கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட விஷேட உத்தரவுக்கு அமைய இன்று சவேந்ர பெர்னாண்டோவிடம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக அந்த அதிகாரி  சுட்டிக்காட்டினார்.

No comments