ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய அனுமதி

களனி ரஜமஹா விகாரையின் நிர்வாக சபையின் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு இன்று (01) நிர்வாக சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

களனி விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த சங்க ரக்கித்த தேரர் தலைமையில் நிர்வாக சபைக் கூட்டம் இன்று நடைபெற்றபோதே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அந்தப் பொறுப்பை வகிக்க வேண்டும் என 3 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்துக்கு அமைய விகாரையின் நிறைவேற்றுக்குழுவுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாக விகாராதிபதி தேரர், நிர்வாக சபைக்கு அறிவித்துள்ளார்.

No comments