முக்கிய விபரத்தை கையளித்தார் ஹரின்

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டுத்தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது சொத்து, பொறுப்பு விபரங்களை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளார்.

இந்நிலையிலேயே சொத்து, பொறுப்பு விபரங்களை வெளியிடத் தவறிய அமைச்சரவை அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்னாண்டோ, மனோ கணேணசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய எட்டுப்பேருக்கு எதிராக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடந்த செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments