தேங்காய் பாதியால் 140 தேங்காய்கள் திருடப்பட்டது - சுவாரஸ்ய சம்பவம்


பரா­ம­ரிக்­கப்­பட்ட தென்னை மரங்­க­ளி­லி­ருந்த சுமார் 140 தேங்­காய்கள் நள்­ளி­ரவில் மாய­மா­ன­தாக ஏறாவூர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த முறைப்­பாட்டை மட்­டக்­க­ளப்பு ஐயங்­கே­ணியைச் சேர்ந்த 60 வய­தான பெண் ஒருவர் செய்­துள்ளார்.

முறைப்­பாட்டில் மேலும், ஏறாவூர் 3ஆம் குறிச்­சி­யி­லுள்ள எனது சகோ­த­ரனின் வீட்­டையும் வீட்டு வள­வி­லுள்ள பயன்­தரும் மரங்­க­ளையும் நானே பரா­ம­ரித்து வரு­கின்றேன். அங்­குள்ள 7 தென்னை மரங்கள் அதி­க­ள­வான தேங்­காய்­க­ளுடன் காணப்­பட்­டன.

சனிக்­கி­ழமை நான் வழ­மை­போன்று தென்னை மரங்­களைப் பரா­ம­ரிப்­பதில் ஈடு­பட்­டி­ருந்­த­போது தென்னை மரங்களிலிருந்த 140 தேங்­காய்கள் காணாமல் போயி­ருந்­தது.

தேங்காய் நன்­றாக முற்றிப் பழுக்­கட்டும் என்­ப­தற்­காக நான் அவற்றைப் பிடுங்­காமல் மரத்­தி­லேயே விட்டு வைத்­தி­ருந்தேன்.

அதே­வேளை, சனிக்­கி­ழமை நான் அயல் வீட்டில் பாதி தேங்காய் கடன் வாங்கி கறி சமைத்­தி­ருந்தேன். அவ்­வா­றி­ருக்­கும்­போது எனது பரா­ம­ரிப்­பி­லி­ருந்த தேங்­காய்கள் திரு­டப்­பட்­டுள்­ளன. எனவே, சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து தகுந்த நஷ்­ட­ஈடு பெற்றுத் தரு­வ­தோடு சந்­தேக நபரைப் பொலிஸார் எச்­ச­ரிக்­கவும் வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார்.

இச்­சம்­ப­வம்­ பற்றி ஏறாவூர் பொலிஸார் விசா­ர­ணை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

No comments