அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில் வீடொன்றின் மீது தாக்குதல்!

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதேசத்தில் வீடொன்றின் மீது இனம் தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று, 01ஆம் பிரிவு, யூனியன் வீதியில் அமைந்துள்ள அகமட் முகைதீன் அகமட் றஸ்மி என்பவரது வீட்டின் மீதே குறித்த தாக்குதல் சம்வம் இன்று (10) செவ்வாய்க்கிழமை அதிகாலை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் வீட்டின்; முன் ஜன்னலகளின் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த சிறு உபகரணங்களும் சிலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

No comments