கோத்தா கழற்றிவிடப்படலாம்?


ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய தொடர்பிலான பிளவுகளுக்குள் சிறிலங்கா பொதுஜன முன்னணி சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மொட்டு சின்னம் விடயத்தில் கட்சிக்குள் உட்பூசல்கள் இருப்பதாக சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறியதாக கொழும்பு செய்தியாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சுதந்திரக்கட்சி கூட்டு சேர்வதானால் பொதுச்சின்னமே தேவையென வாதிடப்பட்டுவருகின்றது.

எனினும் இதனை மறுதலித்துள்ள மகிந்த தாமரை மொட்டு சின்னத்தை கைவிட மறுத்துவருகின்றார்.

இந்நிலையில் கோத்தாவிற்கெதிரான வழக்கு உள்ளிட்டவை சந்தேகத்தை தோற்றுவித்துள்ள நிலையில் கோத்தாவை கழற்றிவிடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments