போராட்டம் மேலும் தீவிரம்! பல்கலைகழ, பள்ளிக்கூட மாணவர்களும் களத்தில்!

சீனாவுடனான ஹாங்காங் செய்துகொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது , 

விடுமுறையின் பின் ஹாங்காங்கில் பாடசாலைகள் பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்துக்கு ஆதராவாக மாணவர்களும் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையின் அடக்குமுறை , கண்ணீர் புகைகுண்டு அடிதடி தண்ணீர் பீச்சி அடித்தல் போன்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாணவர்கள் முகமூடி அணிந்து போராட்டத்தில் குதித்துள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
No comments